உசிலம்பட்டியில் வயர்மேனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மின் வாரிய அலுவலகத்தில் சக ஊழியர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டியை அடுத்த வாலாந்தூரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். வயர்மேனான இவரிடம் வாலாந்தூரைச் சேர்ந்த அக்கினி மகன் உக்கிரபாண்டி, அடிக்கடி ஏன் மின்தடை ஏற்படுகிறது' எனக் கேட்டு, கடந்த சனிக்கிழமை தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உக்கிரபாண்டி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், வயர்மேன் ஜெயகிருஷ்ணன் தாக்கப்பட்டதை கண்டித்தும், உக்கிரபாண்டி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உசிலம்பட்டி மின்சார வாரிய உற்பத்தி மற்றும் மின் பகிர்மான அலுவலகத்தில் உசிலம்பட்டி மற்றும் வாலாந்தூர் மின்வாரிய ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர்
திங்கள்கிழமை காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் இப்போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

