மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

உசிலம்பட்டி அருகே 70 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :21 மே 2018, 11:11 pm

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள போலியப்பட்டியில் ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உசிலம்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணகுமார் ஆலோசனைப் படி, காவல் துறை ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலியப்பட்டியைச் சேர்ந்த சுப்பன் மகன் ஜெயக்குமார் (32), அய்யரதேவர் மகன் ராஜாதேவன்(45), ராமர் மகன் சந்திரன் (34) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.