திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகையா. திருப்பூரில் பனியன் நூற்பாலை வைத்துள்ளார். இவர் தனது மனைவி ஜெனிதா, மகன் அபினேஷ் (11), மகள் ஹரிணி(7) ஆகிய நான்கு பேரும் திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உறவினர் இல்ல விழாவில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் இருந்து காரில் புறப்பட்டனர். திருமங்கலத்தை அடுத்த கரிசல் பட்டி நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே வந்த போது, கார் திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஹரிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஹரிணி உடலை பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடை ந்த ஜெனிதா மற்றும் அபினேஷ் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் 100 சதவீதம் உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும்: கரூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கிழவயல் விநாயகா் கோயில் குடமுழுக்கு

25.6.1976: வறட்சி நிலை: மத்திய நிதி மந்திரியுடன் சுகாதியா பேச்சு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


