முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இளநிலை செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை தெற்குவாசல் ஏபிடி துரைராஜ் மேல்நிலைப்பள்ளியில் மதுரைக் கல்வி மாவட்டத்துக்கான இளநிலை

Updated On :5 நவம்பர் 2018, 7:54 am IST

மதுரை தெற்குவாசல் ஏபிடி துரைராஜ் மேல்நிலைப்பள்ளியில் மதுரைக் கல்வி மாவட்டத்துக்கான இளநிலை செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவர் ஜோஸ் வாழ்த்திப் பேசினார்.  மதுரை கல்வி மாவட்ட ஜூனியர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளரும், ஏபிடி துரைராஜ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான த.பாலசுப்பிரமணியன் பயிற்சி வழங்கினார். மதுரை கல்வி மாவட்ட அலுவலர் கி.அமுதா, மருத்துவர்கள் ராகவ், சுரேஷ் ஆகியோர் மாணவ ஆலோசகர்களுக்கான சிறப்புப் பயிற்சி உரையாற்றினர்.  பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதை சீராக்கும் வழிமுறைகள் குறித்து மனநல ஆலோசகர் டாக்டர் வி.எம். விஜய சரவணன் விளக்கினார். தீத் தடுப்பு குறித்து தீயணைப்பு அதிகாரி ஹரிராமன் பயிற்சி அளித்தார். மதுரை மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இணை அமைப்பாளர்கள் கே.நாகநாதன், ஏ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.