குழந்தைப்பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை உடனடியாக கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப்பருவத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் மருத்துவமனையின் குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை குருதியியல் சிகிச்சை நிபுணர் ந.ஜெயபோஸ் சிறப்புரையில் பேசியது: புற்றுநோயை முன்னதாகவே கண்டறிந்து உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
உலகிலுள்ள மொத்த குழந்தை புற்றுநோயாளிகளில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடந்த 2010-இல் குழந்தைப்பருவ குருதியியல் மற்றும் புற்றுநோயியல் துறை தொடங்கப்பட்டது. இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 800 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வயது வந்தவர்களுக்கான புற்றுநோய் போல இல்லாமல், குழந்தைப்பருவ புற்றுநோய்கள் அதிகளவில் குணப்படுத்தக்கூடியவை. மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 75 சதவீதம் குழந்தைகள் குணமடைந்துள்ளனர். இங்கு சிகிச்சைப்பெற்றுள்ள குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ஏழ்மையான பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுகிற மற்றும் ஏழை குழந்தைகளின் நலனுக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இயங்கி வரும் கமீலா குழந்தைகள் புற்றுநோய் நிதியத்திலிருந்து உதவி செய்யப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் குருதியாக்க ஸ்டெம்செல் துறைத்தலைவர் டி.காசி விஸ்வநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். இதில் புற்றுநோயிலிருந்து மீண்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்று சிகிச்சை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். புற்றுநோயிலிருந்து மீண்டு, தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

