அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்: 2 நாள்களில் 35 ஆயிரம் மனுக்கள்

மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை

Updated On :25 பிப்ரவரி 2019, 7:38 am IST

மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர்களாகப் பெயர் சேர்க்க, திருத்த, நீக்க என மொத்தம் 33 ஆயிரத்து 079 பேர் மனுக்கள் அளித்துள்ளனர்.
நிகழாண்டு, ஜன. 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மதுரை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 23, 24)  வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய  சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இம்முகாம்களில், புதிதாக பெயர் சேர்க்க (படிவம் ) 27 ஆயிரத்து 968 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்களில் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்கள் 12 ஆயிரத்து 807 பேர் ஆவர். அதேபோல, பெயர் நீக்கம் (படிவம் 7) செய்ய 1708 பேரும், திருத்தம் செய்ய (படிவம் 8) 1873 பேரும், பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய (படிவம் 8ஏ)  1530 பேரும் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் மேலூர் தொகுதியில் 2,606 விண்ணப்பங்களும், மதுரை கிழக்கில் 5,378 விண்ணப்பங்களும், சோழவந்தான் தனித்தொகுதியில் 2,537 விண்ணப்பங்களும், மதுரை வடக்குத் தொகுதியில் 1,951 விண்ணப்பங்களும், மதுரை தெற்கில் 2,384, மத்திய மதுரையில் 3,197,மதுரை மேற்கில் 4,560, திருப்பரங்குன்றத்தில் 4,424, திருமங்கலத்தில் 2,653, உசிலம்பட்டியில் 3,389 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.