மதுரையில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சிகிச்சைக்காக வெளியூர் அழைத்துச்சென்றுவிட்டு, புதன்கிழமை காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


