பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

டோக் பெருமாட்டி கல்லூரி பவள விழா: ஜன.25, 26 இல் ஆண் ஊழியர்களுக்கான மாநில கைப்பந்து போட்டி

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் பவள விழாவையொட்டி ஆண் பணியாளர்களுக்கான மாநில அளவிலான

Updated On :24 ஜனவரி 2019, 2:37 am IST

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் பவள விழாவையொட்டி ஆண் பணியாளர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன.25, 26) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் கிறிஸ்டியானா சிங், துணை முதல்வர் ரேச்சல் ரெஜி டேனியல், கல்லூரியின் நிதிக்காப்பாளர் மரியநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: மதுரையின் முதல் பெண்கள் கல்லூரியான டோக் பெருமாட்டி கல்லூரி தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பவள விழா நடைபெறுகிறது. இதில் கலாசார நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லாத ஆண் பணியாளர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன.25, 26) நடைபெறுகிறது. கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. மேலும் விளையாட்டில் ஈடுபடுவது உடல், மன ஆரோக்கியத்தை பேணி காக்கும். அதன்மூலம் பணிச்சோர்வு நீங்கி பணியில் கூடுதல் கவனம் உருவாகும் என்ற அடிப்படையில் இப்போட்டி நடைபெறுகிறது. 
 வெள்ளிக்கிழமா மாலை நடைபெறும் கைப்பந்து போட்டியின் தொடக்க விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.தனுஷ்கோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கிறார். இதில் டோக் பெருமாட்டியின் முன்னாள் மாணவியும், ஒத்தக்கடை காவல்நிலைய சார்பு ஆய்வாளருமான வி.ஜெயலட்சுமி வாழ்த்தி பேசுகிறார்.
போட்டியின் நிறைவு விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவியும், இந்தியன் வங்கியின் முன்னாள் உதவி மேலாளருமான ராஜேஸ்வரி போதிநாதன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.ராஜா வாழ்த்திப் பேசுகிறார்.
கைப்பந்து போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பை, ரூ.5 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாடமிடம் பெறும் அணிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.