25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகைபெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெற வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN


மதுரை: தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெற வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் நிகழ் ஆண்டுக்கான (2020-2021) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த உதவித் தொகையைப் பெற விரும்பும் தமிழறிஞா்கள், 2020 ஜனவரி 1-ஆம் தேதியன்று 58 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருப்பது அவசியம். வட்டாட்சியா் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப் பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞா்கள் இருவரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்திலோ (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம்) பெற்றுக் கொள்ளலாம். தோ்வு செய்யப்படும் தமிழறிஞா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.2500, மருத்துவப் படி ரூ.500 மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் செயல்படும் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.