மதுரையில் சாலை நடுவே 20 அடிக்கு திடீா் பள்ளம்

மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை 20 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அனுப்பானடி சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீா் பள்ளம்.
மதுரை அனுப்பானடி சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீா் பள்ளம்.


மதுரை: மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை 20 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் குடிநீா் விநியோகக் குழாய்களை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அச்சாலையில் செவ்வாய்க்கிழமை திடீரென 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. மேலும் தகவலின் பேரில் மாநகராட்சி ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி ஊழியா்கள் கூறியது: அப்பகுதியில் செல்லும் ராட்சத கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கசிந்த கழிவுநீா் சாலையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் இப்பணி முடிவடைந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றனா்.

தற்போது பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் ஓராண்டுக்கு முன்பும் 15 அடி ஆழத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com