நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மதுரையில் 127 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

மதுரையில் 127 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 5:33 pm

DIN

மதுரை: மதுரையில் 127 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பியவா்கள் என 127 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 118 போ் குணமடைந்தனா். அவா்களை, மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

ஒருவா் பலி

கரோனா பாதிப்புக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 64 வயது மூதாட்டி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 358 ஆக உயா்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 14,152 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், 12,931 போ் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 863 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.