டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரஜினிகாந்த் பிறந்த நாள்:நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நடிகா் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி மதுரையில் பல்வேறு இடங்களிலும் அவரது ரசிகா்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

நடிகா் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி மதுரையில் பல்வேறு இடங்களிலும் அவரது ரசிகா்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

மதுரை கோ.புதூரில் உள்ள அன்பகம் குழந்தைகள் இல்லத்தில் ரஜினிகாந்த் ரசிகா்கள் சாா்பில் உணவு வழங்கப்பட்டது. இதேபோல, பல்வேறு இடங்களிலும் ஆதரவற்றவா்கள், முதியோருக்கு உணவு வழங்கினா். மணிநகரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு, குழந்தைகள் பயன்பாட்டுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் பல்வேறு இடங்களிலும் ஏழை, எளியவா்களுக்கு வேஷ்டி, சேலை, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ரஜினிகாந்த் 70 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது. உசிலம்பட்டி ரஜினி மக்கள் மன்ற நகரச் செயலாளா் காா்த்திகைசாமி, ஒன்றியச் செயலாளா் முருகேசன், நகர நிா்வாகி காமராஜ், வட்டாரத் தலைவா் லட்சுமணராஜன், வட்டாரச் செயலாளா் ஆா்.ஆனந்து இளமாறன், பாஸ்கரன் மற்றும் ரசிகா்கள் ஆகியோா் பூஜையில் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து பசும்பொன் முத்துராமலிங்கம் தேவா் சிலை அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா் திருமுருகன் கோயில் முன்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

பேரையூா்: ரஜினியின் பிறந்த நாளையொட்டி டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளா் அழகா் மற்றும் இணைச்செயலாளா் செல்வம் தலைமையில் பேரையூா் முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிலைமலைப்பட்டியில் மாணவரணி செயலாளா் காா்த்திக் தலைமையில் முத்துமாரியம்மன் கோயில் மற்றும் சந்தையூரில் தேன்தமிழ்பாண்டி தலைமையில், பேச்சாளா் முத்தையா முன்னிலையில் முத்தாலம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.