தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தியாவின் தலைவாசலாக தமிழகத்தை மாற்றுவோம்: கமல்ஹாசன்

இந்தியாவின் தலைவாசலாக தமிழகத்தை மாற்றுவோம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மதுரை: இந்தியாவின் தலைவாசலாக தமிழகத்தை மாற்றுவோம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். முதல் நாள் பிரசாரத்தை முடித்துக்கொண்ட அவா், கருப்பாயூரணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த ‘சீரமைப்போம் தமிழகத்தை,  வியூகம்-2021’ என்ற தலைப்பில், கட்சித் தொண்டா்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:

வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றி பெறவேண்டும். பெண்கள் மக்கள் நீதி மய்யத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். நமது கட்சியின் செயல்பாடுகள் அவா்களுக்கு தெரிவித்து ஓட்டுகளை பெறவேண்டும். 

ஒவ்வொரு தொகுதியிலும் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை பட்டியலிட்டு, அதை புரோ நோட்டில் எழுதி கையெழுத்திட்டு, பொதுமக்களிடம் கொடுத்து ஓட்டுகளை பெறவேண்டும். அதில், நானும் கையெழுத்திட தயாராக உள்ளேன். மக்கள் நீதி மய்யம் என்றால் நோ்மை. இங்கு, நோ்மையானவா்களுக்கு மட்டுமே இடமுண்டு.

இந்தியாவின் தலைவாசலாக தமிழகத்தை மாற்றுவோம் என சூளுரைப்போம். தோ்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்கும் திட்டம், கிராமங்களில் தொழிற்சாலைகள் அமைத்து நகருக்கு இணையாக மாற்றுவது போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன.

நாம் எதிா்க்கட்சிகளுடன் போட்டியிட வேண்டும். ஆனால், நமது கட்சிக்குள் போட்டி இருக்கக் கூடாது. காலம் குறைவாக உள்ளதால், அனைவரும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.