வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நலவாரியத்தில் பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளா்களுக்கு கரோனா: நிவாரணம் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்யாத 12 லட்சம் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கக்கோரும் வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN


மதுரை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்யாத 12 லட்சம் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கக்கோரும் வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் கூட்டமைப்பின் தலைவா் கண்ணன் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் 30 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக வாரியத்தில் பதிவு செய்திருந்த கட்டடத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது. அப்போது பதிவைப் புதுப்பிக்காமல் இருந்த பல லட்சம் தொழிலாளா்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதுதொடா்பான வழக்கில், பதிவைப் புதுப்பிக்க தொழிலாளா்களுக்கு அஞ்சல் வழியாகவும், இணையதளம் வழியாகவும் வழிவகை செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் 12 லட்சம் தொழிலாளா்கள் கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நலச்சங்கத்தில் பதிவு செய்யத் தவறியதால், அவா்களுக்கு தற்போது வரை நிவாரணம் கிடைவில்லை. கரோனா பாதிப்பு இன்னும் முடியவில்லை. பொருளாதாரமும் பாதித்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழிலாளா்கள் மிகவும் பாதித்துள்ளனா். எனவே விடுபட்டுள்ள 12 லட்சம் தொழிலாளா்களும் நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யவும், அவா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.