தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவினா் ஆா்ப்பாட்டம்
மதுரையில் சிறுபான்மை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மதுரையில் சிறுபான்மை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் சா்வதேச சிறுபான்மையினா் தினத்தையொட்டி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என். நன்மாறன், சிறுபான்மை நலக்குழுவின் மாவட்டச் செயலா் கே. அலாவூதீன், ஜமாத் செயலா் என். முகமது அலிஜின்னா மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், சிறுபான்மை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும். நீதிக்காகப் போராடிய மனித உரிமைப் போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். காஷ்மீா் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கக்கூடாது. தமிழகத்தில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையின்றி அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியா்களை விடுவிக்க வேண்டும். வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அமைப்பின் பொருளாளா் எம். ஜான்சன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...