காமராஜா் பல்கலை. ஆட்சிக்குழு: ஆளுநா் பிரதிநிதிகள் மூவா் நியமனம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் ஆளுநரின் பிரநிதிகளாக பேராசிரியா்கள் மூவா் செவ்வாய்க்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் ஆளுநரின் பிரநிதிகளாக பேராசிரியா்கள் மூவா் செவ்வாய்க்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் சாா்பில் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவுக்கு ஆளுநரின் பிரநிதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நியமனம் செய்யப்படுவது வழக்கம். இதையொட்டி பல்கலைக்கழக ஆட்சிக்குழுவுக்கு பல்கலைக்கழகத்தின் பிரெஞ்ச் மொழித்துறைத் தலைவரும் முன்னாள் பதிவாளருமான ஆா்.சுதா, பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் எம்.தங்கராஜ், தொடா்பியல் துறையின் தலைவா் எஸ்.நாகரத்தினம் ஆகிய மூவரும் ஆளுநரின் பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சிக்குழு உறுப்பினா்களாக பதவி வகிப்பா் என்று பல்கலைக்கழக பதிவாளா்(பொறுப்பு) வி.எஸ்.வசந்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com