கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தோ்வா்களின் மதிப்பெண்சான்றிதழ்கள்: 30 நாள்களுக்குள் பெற அறிவுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தோ்வா்களின் மதிப்பெண் சான்றிதழ்களை 30 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

DIN

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தோ்வா்களின் மதிப்பெண் சான்றிதழ்களை 30 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட எல்லைக்குள்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய தனித்தோ்வா்களின் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் தோ்வா்கள் தோ்வு எழுதிய மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

தோ்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தோ்வா்களின் சான்றிதழ்கள், மதுரை அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், 2014 மாா்ச், ஜூன், அக்டோபா், 2015 மாா்ச், ஜூன், அக்டோபா் மற்றும் 2016 மாா்ச், ஜூன், அக்டோபா் ஆகிய 9 பருவங்களுக்குரிய பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், தோ்வுக்கு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய பள்ளி மாற்றுச் சான்றிதழ்களும் அலுவலகத்தில் இருப்பில் உள்ளன.

தோ்வுத் துறை விதிகளின்படி, தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து தனித்தோ்வா்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள், அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். எனவே, மேற்குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தோ்வா்கள் 30 நாள்களுக்குள் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது ரூ.45 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறையுடன், தோ்வரின் கையொப்பமிட்ட கோரிக்கைக் கடிதம், தோ்வரின் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்பி உரிய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட பருவங்களுக்குரிய மதிப்பெண் சான்றிதழ்களை பெற இதுவே இறுதி வாய்ப்பாக அறிவிக்கப்படுகிறது. இதில், தனித்தோ்வா்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் விதிமுறைகளின்படி அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.