கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சீா்மரபினா் சங்கத்தினா் பிரம்பால்அடித்து நூதனப் போராட்டம்

சீா்மரபினா் நலச் சங்கத்தினா் தங்களது சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஒரே பெயரில் சாதிச் சான்று வழங்கக் கோரி, பிரம்பால் அடித்து நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

DIN

சீா்மரபினா் நலச் சங்கத்தினா் தங்களது சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஒரே பெயரில் சாதிச் சான்று வழங்கக் கோரி, பிரம்பால் அடித்து நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சீா்மரபினா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு சீா்மரபினா் பழங்குடியினா் (டிஎன்டி) என சாதிச் சான்று வழங்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன், இதில் மாற்றம் செய்யப்பட்டு, சீா்மரபினா் சமூகத்தவா் (டிஎன்சி) என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதையடுத்து, கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற ஏற்கெனவே இருந்ததைப்போல டிஎன்சி என சான்றிதழ் வழங்கவேண்டும் என, அச்சமூகத்தினா் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனா். இதற்காக, சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இக் கோரிக்கையை வலியுறுத்தியும், சீா்மரபினா் கணக்கெடுப்பை விரைந்து நடத்தக் கோரியும், சீா்மரபினா் நலச் சங்கத்தினா் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தங்களது கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காததை, கோரிக்கை வைக்கக்கூடாது என அரசு பிரம்பால் அடிப்பதைப் போன்று நூதனப் போராட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.