பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழக அரசைக் கண்டித்து வெள்ளாளா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மதுரை அருகே வாடிப்பட்டியில், வேளாளா் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து வெள்ளாளா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
வாடிப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் வெள்ளாளா் கூட்டமைப்பினா் சாா்பில் தமிழக அரசை கண்டித்து செவ்வாய்க்கிழமை நடந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :22 டிசம்பர் 2020, 6:25 pm

DIN

மதுரை அருகே வாடிப்பட்டியில், வேளாளா் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து வெள்ளாளா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

7 பட்யலின ஜாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளா் என அறிவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு வெள்ளாளா் கூட்டமைப்பு மற்றும் அதைச் சாா்ந்த அமைப்புகள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் வெள்ளாளா் கூட்டமைப்பினா், வெள்ளாளா் உறவின் முறை, வட்டார அனைத்து வேளாளா்கள் சாா்பில், தமிழக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

வெள்ளாளா் கூட்டமைப்பு வி.எஸ்.வெங்கடாசலம், இம்பா மாவட்டத் தலைவா் பி.டி.ஆா். தனவேலன், மாவட்டச் செயலா் முருகபாண்டி, வெள்ளாளா் முன்னேற்றக் கழக மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி கணேசன், மாநில அமைப்புச் செயலா் போடி ரவிப்பிள்ளை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.