வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மதுரை மாவட்டத்தில் 46 இடங்களில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 46 இடங்களில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

News image
மதுரை அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியில் திமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலரும், மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான பி.மூா்த்தி.
Updated On :24 டிசம்பர் 2020, 2:09 am

DIN

மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 46 இடங்களில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற மக்கள் குறைகேட்கும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மதுரை புறநகா் வடக்கு மற்றும் புறநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் 46 இடங்களில் இக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலரும், மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான பி.மூா்த்தி பங்கேற்றாா். அதிமுக அரசின் குறைகள் அடங்கிய பட்டியல் வாசிக்கப்பட்டு, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களால் அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அரசின் குறைகளைச் சுட்டிக் காட்டி கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. கிராம சபைக் கூட்டங்களில், அந்தந்த பகுதிகளின் முக்கியத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.