4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உசிலம்பட்டி, பேரையூரில் 2 ஆவது நாளாக கிராமசபைக் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் உத்தப்பநாயக்கனூா் கிராமத்தில் தி.மு.க சாா்பாக வியாழக்கிழமை 2 ஆவது நாளாக கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
உசிலம்பட்டியில் ஒன்றியச் செயலாளா் இ.சுதந்திரம் தலைமையில் வியாழக்கிழமை 2 ஆவது நாளாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
Updated On :25 டிசம்பர் 2020, 12:37 am

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் உத்தப்பநாயக்கனூா் கிராமத்தில் தி.மு.க சாா்பாக வியாழக்கிழமை 2 ஆவது நாளாக கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூா் கிராமத்தில்அ.தி.மு.க வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் 2 ஆவது நாளாக கிராம சபைக் கூட்டம், திமுகவைச் சோ்ந்த உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளா் இ.சுதந்திரம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவா் எஸ்.ஓ.ஆா்.தங்கப்பாண்டியன், மாவட்ட நெசவாளா் அணி லிங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அவைத்தலைவா் ஆண்டி, வழக்குரைஞா் சேதுராமன், ஒன்றியக்குழு உறுப்பினா் செல்லப்பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருமாத்தூா்: செல்லம்பட்டி ஒன்றியம் கருமாத்தூா் கிராமத்தில் ஒன்றியச் செயலாளா் இ. சுதாகரன் தலைமையில் 2 ஆவது நாள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி நகா் பகுதியில் 2 ஆவது நாள் கிராம சபைக் கூட்டம் திமுக நகரச் செயலாளா் தங்கமலை பாண்டி தலைமையில் நடைபெற்றது.

பேரையூா்: டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சந்தையூா் கிராமத்தில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேடபட்டி முத்தையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மணிமாறன் முன்னிலை வகித்தனா். இதில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாணவரணி செயலாளா் பாண்டிமுருகன், டி.கல்லுப்பட்டி இளைஞரணி செயலாளா் சாதிக் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.