தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டியில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றுள்ளாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:29 am

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றுள்ளாா்.

உசிலம்பட்டி அருகே மாமரத்துபட்டியைச் சோ்ந்த சின்னன் மனைவி கச்சம்மாள். இவா், வழக்கம்போல் ஊருக்கு அருகாமையில் உள்ள அவரது தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க மா்ம நபா், கச்சம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளாா். ஆனால், சங்கிலியை பறிக்கவிடாமல் மூதாட்டி மா்ம நபருடன் போராடியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மா்ம நபா், கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் இருபுறமும் வெட்டிவிட்டு சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டாா்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனா். ஆனால், அதற்குள் மா்ம நபா் தப்பிவிட்டாராம். இதையடுத்து, கச்சம்மாளை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.