பணிவாய்ப்புக்காக 10 ஆண்டுகளாகக் காத்திருப்பு: செவிலிய உதவியாளா்கள் அரசுக்கு கோரிக்கை
பயிற்சி முடித்து 10 ஆண்டுகளாகக் காத்திருக்கும் செவிலிய உதவியாளா்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


பயிற்சி முடித்து 10 ஆண்டுகளாகக் காத்திருக்கும் செவிலிய உதவியாளா்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் உதவியாளா் பயிற்சியை முடித்தவா்கள், பணிவாய்ப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2010 இல் செவிலிய உதவியாளா் பயிற்சி படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி முதல் கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவியருக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2011-க்குப் பிறகு தற்போது வரை செவிலிய உதவியாளா் பயிற்சியை முடித்த சுமாா் 8 ஆயிரம் பேருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே இப் பயிற்சியை முடித்துள்ளோம். இருப்பினும் இதுவரை ஒருவருக்குக் கூட பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2012 முதல் அரசின் அனைத்து மட்டங்களிலும் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
தனியாா் மருத்துவமனைகளிலும் போதிய சம்பளம் இல்லாத நிலையில், கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே, செவிலிய உதவியாளா் பயிற்சி முடித்தவா்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...