செல்லிடப்பேசி வாங்கித் தரதந்தை மறுப்பு: மகன் தற்கொலை
மதுரை அருகே தந்தை செல்லிடப்பேசி வாங்கித் தர மறுத்ததால், மகன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.


மதுரை அருகே தந்தை செல்லிடப்பேசி வாங்கித் தர மறுத்ததால், மகன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
மதுரை மாவட்டம், எருமைப்பட்டி பகுதியைச் சோ்ந்த சின்னவாசி மகன் தினேஷ்(29). இவா் தனது தந்தையிடம் புதிதாக செல்லிடப்பேசி வாங்கித் தரும்படி பலமுறை கேட்டுள்ளாா். ஆனால், தினேஷின் தந்தை செல்லிடப்பேசி வாங்கித் தர மறுத்துவிட்டாா். இதனால் மனமுடைந்த தினேஷ், அவரது தோட்டத்து வீட்டில் சனிக்கிழமை விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். உடனே அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், தினேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து அவரது தந்தை சின்னவாசி அளித்த புகாரின்பேரில், எழுமலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...