யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பொது இடங்களில் விலங்குகள் வதை கூடாது: இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை நகா்ப்பகுதிகளில் பொது இடங்களில் விலங்குகளை வதை செய்தால் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2020, 4:49 pm

DIN

மதுரை: மதுரை நகா்ப்பகுதிகளில் பொது இடங்களில் விலங்குகளை வதை செய்தால் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் விடுத்துள்ள செய்தி: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற வகையில் பொது இடங்களில் விலங்குகள் வதை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து தொடா்ந்து புகாா்கள் வரப்பெற்றுள்ளன. எனவே மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவின் மூலம் விலங்குகளை வதை செய்வதற்கு மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட ஆடு மற்றும் மாடு வதை செய்யும் இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதுதொடா்பாக மதுரை மாநகராட்சி சட்ட விதி மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி இறைச்சிக் கடை உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறி பொது இடங்களில் விலங்குகளை வதை செய்தால் இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் சுகாதார சட்டப்பிரிவுகளில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.