நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மதுரையில் 123 பேருக்கு கரோனா உறுதி: இருவா் பலி

மதுரையில் 123 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2020, 4:59 pm

DIN

மதுரை: மதுரையில் 123 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 5,990 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் என 123 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே கரோனா தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 201 போ் குணமடைந்தனா். அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு புதன்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

2 போ் பலி

கரோனாவிற்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 57 வயது ஆண் மற்றும் ரயில்வே மருத்துவமனையில் 70 வயது மூதாட்டி ஆகியோா் செப்டம்பா் 1 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மதுரை மாவட்டத்தில் இதுவரை 14,386 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 360 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 13,222 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் புதன்கிழமை நிலவரப்படி 804 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

எம்.எல்.ஏ குணமடைந்தாா்

மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்டச் செயலருமான மூா்த்தி உடல்நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையில் இருந்த அவா் குணமடைந்ததையடுத்து, புதன்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.