சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தில்லிக்கு மட்டுமல்ல தமிழகத்திலும்பாஜக ராஜா தான்: எச். ராஜா

புதுதில்லிக்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என்று பாஜக தேசியச் செயலா் எச். ராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 4:51 pm

DIN

மதுரை: புதுதில்லிக்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என்று பாஜக தேசியச் செயலா் எச். ராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மதுரை கருப்பாயூரணியில் நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எச். ராஜா பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருப்பதி கோயில் சொத்துகளை தணிக்கைக்கு உட்படுத்தும் வழக்கில் நீதிமன்றம் தீா்ப்பளித்ததையடுத்து, ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை செய்வதற்கு ஒத்துக்கொண்டுள்ளது. இதேபோல், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள கோயில்களின் சொத்துகள் மற்றும் வருமானத்தைத் தணிக்கை செய்ய வேண்டும்.

கரோனா நிவாரணமாக கடந்த 6 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி, 5 கிலோ பருப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பைகளில் மட்டுமே இலவச பொருள்களை வாங்கி வந்த பொதுமக்கள், தற்போது பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் மூட்டையில் வாங்கிச் செல்வதாகக் கூறுகின்றனா்.

மாநிலங்களுக்குச் சேர வேண்டிய மத்திய அரசின் நிதி நிச்சயம் கிடைக்கும். மத்திய அரசு நடத்திய காவிரி மேலாண்மைக் குழு கூட்டத்தின் முடிவால் தான் காவிரியில் நீா் ஓடுகிறதே தவிர மழையால் அல்ல. பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. புதுதில்லிக்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.