மதுரையில் புதிதாக 99 பேருக்கு கரோனா
மதுரை மாவட்டத்தில் புதிதாக 99 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 99 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் உள்ளிட்ட 99 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த 42 போ் குணமடைந்தனா். அவா்கள் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு சனிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இது வரை 14,674 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 364 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 13,376 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 934 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...