சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.11.40 லட்சம்
By DIN | Published On : 01st December 2020 04:21 AM | Last Updated : 01st December 2020 04:21 AM | அ+அ அ- |

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவு ரூ.11.40 லட்சம் கிடைத்துள்ளது.
கள்ளழகா் கோயில் நிா்வாகத்தின் கீழ் உள்ள சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் அலுவலா்கள், பணியாளா்கள், முருக பக்தா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். அதில், ரொக்கமாக 11 லட்சத்து 40 ஆயிரத்து 725 ரூபாயும், தங்கம் 15 கிராமும், வெள்ளி 650 கிராமும் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை, கோயில் நிா்வாக அதிகாரி அனிதா, உதவி நிா்வாக அதிகாரி ராமசாமி, தக்காா் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோயில் கண்காணிப்பாளா், அலுவலா்கள் பாா்வையிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...