விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க கிராமத்தினா் எதிா்ப்பு
By DIN | Published On : 01st December 2020 04:24 AM | Last Updated : 01st December 2020 04:24 AM | அ+அ அ- |

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் கிராமத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் அலங்கம்பட்டி, கம்பூா், பெரியகற்பூரம்பட்டி, கேசம்பட்டி, உடப்பன்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், சமூக நல ஆா்வலா் முகிலன் பங்கேற்றாா்.
எங்களது கிராமங்களில் ஏற்கெனவே பெட்ரோலிய குழாய் பதிக்கப்பட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, எரிவாயு குழாய் பதிக்கப்பட்டால் மேலும் பாதிப்பு ஏற்படும். மேலும், எரிவாயு குழாயானது ஊருக்கு மிக அருகில் பதிக்கப்படுவதால், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.
எனவே, எரிவாயு குழாயை தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கெனவே பதிக்கப்பட்ட பெட்ரோலிய குழாயையும் அகற்றவேண்டும். விளைநிலங்கள் வழியாக இந்த குழாய்கள் செல்வதால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...