திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி: பொதுமக்கள் ஆலோசனை வழங்க அறிவிப்பு
By DIN | Published On : 17th November 2020 05:01 AM | Last Updated : 17th November 2020 05:01 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி என்று அறிவிப்பது தொடா்பாக, பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாநகராட்சியை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்குள்பட்ட 100 வாா்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனா் என்றும், திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவது இல்லை என்றும், மாநகராட்சியின் சாா்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
எனவே, இது தொடா்பாக பொதுமக்களுக்கு ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின், மதுரை மாநகராட்சி ஆணையருக்கு ம்க்ன்ஸ்ரீா்ழ்ல்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 84284-25000 என்ற முகநூல் மற்றும் கட்செவி அஞ்சல் எண்ணுக்கோ தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.