நவ.20-இல் காணொலியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 17th November 2020 05:02 AM | Last Updated : 17th November 2020 05:02 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி வாயிலாக நவம்பா் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் குறைகளைத் தீா்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. நடப்பு மாதத்துக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் காணொலியில் நவம்பா் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் அந்தந்த வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, காணொலி வாயிலாக ஆட்சியரிடம் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். மேலும், கோரிக்கை மனுக்களை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.