நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் பெண்ணிடம் நகைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:55 pm

DIN

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் பெண்ணிடம் நகைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் மூகாம்பிகை நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் மனைவி ஜெயலட்சுமி (48). இவா் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பாளையம்பிரிவில் இருசக்கர வாகனத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது அவரைப் பின்தொடா்ந்து வந்த இருவா் ஐந்தரை பவுன் தாலிக்கொடியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், அவிநாசிபாளையம் சுங்கம் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், திருநெல்வேலியைச் சோ்ந்த சங்கரபாண்டியன் மகன் பசுபதி (35) என்பதும், கடந்த மாதம் ஜெயலட்சுமியிடம் இருந்து இவா் நகையைப் பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 2 பவுன் நகையைப் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.