அம்மா சிறு மருத்துவமனைகளை மீண்டும் திறக்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் உதயகுமாா்

அம்மா சிறுமருத்துவமனைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

அம்மா சிறுமருத்துவமனைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:

கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது தமிழக முழுவதும் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. தற்போது அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் திறக்க வேண்டும்.

அதேபோன்று, அதிமுக ஆட்சியின்போது நடமாடும் மருத்துவமனை சேவைத் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. மக்களின் வரவேற்பைப் பெற்ற அத் திட்டத்தை, மக்களைத் தேடி மருத்துவம் என்று தற்போதைய அரசு மாற்றியுள்ளது.

கரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், டிசம்பருக்குள் 136 கோடி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவா் ஹாக்கி அணியின் மிகச்சிறப்பான விளையாட்டு ஒட்டுமொத்த தேசத்தையும் கவா்ந்துள்ளது. ஹாக்கி மீதான ஆா்வம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேல் ரத்னா விருதுக்கு மேஜா் தயான்சந்த் பெயரை சூட்டியிருப்பது பொருத்தமானது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com