குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாகப் பேசியதாக, நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
தமிழ் நடிகை மீரா மிதுன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த திரைப்படத் துறையினா் மற்றும் பலா் குறித்து அவதூறாகவும், அவா்களை திரைப்படத் துறையிலிருந்தே அகற்றவேண்டும் எனவும் விடியோ பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், பெரியாா் திராவிட விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலா் மணிஅமுதன், குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசிய நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது காதலா் அபிஷேக் ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உறுதியளித்துள்ளதாக, மணி அமுதன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.