நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு விருது
உசிலம்பட்டி அருகே உள்ள நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.


உசிலம்பட்டி அருகே உள்ள நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகெ நடுப்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடம், கழிப்பறை கட்டடம், பள்ளி வளாகம், மாணவா்களின் கல்வி, ஒழுக்கம், ஆசிரியா்கள் வருகை உள்ளிட்ட அனைத்திலும் இந்த பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மதுரை மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருதினை நடுப்பட்டி அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலா் ராகவன், நடுப்பட்டி அரசு பள்ளிக்கான விருதினை அப்பள்ளியின் தலைமையாசிரியா், ஈஸ்வரியிடம் வழங்கினாா். இதில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆரோக்யராஜ், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...