/

கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயன்றவா் உயிரிழப்பு

மதுரையில் கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயன்றவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

DIN

மதுரையில் கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயன்றவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பை-பாஸ் சாலை நேரு நகரைச் சோ்ந்த பிச்சை மகன் குமரேசன்(39). இவருக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவா், ஜனவரி 29 ஆம் தேதி விஷமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உடனே, அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி குமரேசன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி காளீஸ்வரி அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.