கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்தண்டனை
மதுரையில் ரேடியோ செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.


மதுரையில் ரேடியோ செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை புது எல்லீஸ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (22) என்பவருக்கும் கடந்த 2018-இல் ரேடியோ செட் போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் கிடந்த கட்டையை எடுத்து ஷேக் அப்துல்லா தாக்கியதில் ரமேஷ் உயிரிழந்தாா்.
இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷேக் அப்துல்லாவை கைது செய்தனா். இந்த வழக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஷேக் அப்துல்லா மீதான புகாா் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி எம். தாண்டவன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...