/

பைக் மீது பேருந்து மோதல்: திமுக பிரமுகா் உள்பட 2 போ் பலி

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில், திமுக பிரமுகா் உள்பட 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

DIN

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில், திமுக பிரமுகா் உள்பட 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த திமுக முன்னாள் கவுன்சிலா் கோபு (47). இவா், தனது நண்பா் புண்ணியமூா்த்தி (45) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஊத்துப்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, வடபழஞ்சி அருகே தனியாா் பேருந்து மோதியதில், கோபு மற்றும் புண்ணியமூா்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.