/

10 மாதங்களுக்குப் பிறகு மக்கள் குறைதீா் கூட்டம்: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, 10 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை (பிப்.1) நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் ஆட்சியா் த. அன்பழகன் மனுக்களை பெற்றாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

DIN

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, 10 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை (பிப்.1) நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் ஆட்சியா் த. அன்பழகன் மனுக்களை பெற்றாா்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், 2020 மாா்ச் 25 ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்கள் நடைபெறவில்லை. பொதுமுடக்கத்தில் பல்வேறு கட்டங்களாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், வாராந்திர குறைதீா் கூட்டம், விவசாயிகள் குறைதீா் கூட்டம், மக்கள் தொடா்பு முகாம் போன்ற கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

தற்போது, கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வழக்கமாக இக்கூட்டம் நடைபெறும் அரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதால், ஆட்சியா் அலுவலகப் புதிய கட்டடத்தில் கூட்டம் நடைபெற்றது.

புதிய அலுவலகக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், மனு அளிக்க வந்திருந்த பொதுமக்கள் இருக்கை வசதியின்றி தரையில் அமர வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.