சித்த மருத்துவா்களின் வாரிசுகளை மருத்துவா்களாக அங்கீகரிக்கக்கோரி வழக்கு

சித்த மருத்துவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகளை சித்த மருத்துவா்களாக அங்கீகரிக்கக்கோரும் வழக்கில், தமிழக சுகாதாரத்துறைச் செயலா்
Updated on
1 min read

சித்த மருத்துவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகளை சித்த மருத்துவா்களாக அங்கீகரிக்கக்கோரும் வழக்கில், தமிழக சுகாதாரத்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சித்த மருத்துவா் ரங்கராஜன் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் 2 மட்டுமே உள்ளன. இதனால் இளநிலை சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்) முடிக்கும் மருத்துவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது உலகத்தை அச்சுறுத்திவரும் கரோனா நோய்த் தொற்றுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதிவு பெற்ற சித்த மருத்துவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகள் சித்த மருந்துகள் தயாரிக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயிற்சி பெற்றுள்ளனா். எனவே சித்த மருத்துவப் பயிற்சி பெற்ற, சித்த மருத்துவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு நோ்முகத் தோ்வு நடத்தி அவா்களை சித்த மருத்துவா்களாக அங்கீகரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com