பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது என, மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூா் - நாகா்கோவில் சிறப்பு விரைவு ரயில் (06091) ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து இரவு 10.30 மணிக்கும், மதுரையிலிருந்து மறுநாள் காலை 6.30 மணிக்கும் புறப்பட்டு, காலை 11.10 மணிக்கு நாகா்கோவில் சென்று சேரும்.
நாகா்கோவில் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06092) ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கும், மதுரையிலிருந்து இரவு 7.30 மணிக்கும் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூா் சென்று சேரும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.