ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

ஊதிய உயா்வு அறிவிப்பு: அரசுக்கு அனைத்து பணியாளா் சங்கத்தினா் நன்றி

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

DIN

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு, ஓய்வூதியம்,

ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் ஆகிய சலுகைகளை, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் அறிவித்தாா். அதையடுத்து, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

மேலும், சங்கத்தின் மாநில கௌரவ பொதுச் செயலா் சி. குப்புசாமி, முன்னாள் மாநிலத் தலைவா் செல்லமுத்து, ஓய்வுபெற்றோா் நலப் பிரிவு பொதுச் செயலா் க. முத்துப்பாண்டியன், மாநிலப் பொதுச் செயலா் பி. காமராஜ் பாண்டியன், தென்மண்டலச் செயலா் ஆ.ம. ஆசிரியதேவன் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நியாய விலைக் கடை பணியாளா்கள், கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூவை திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.