தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி சீா்மிகு நகா் திட்டப் பணிகள் மேற்கொள்ள இடைக்காலத் தடை
தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி சீா்மிகு நகா் திட்டப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடைவிதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.


தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றி சீா்மிகு நகா் திட்டப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடைவிதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சோ்ந்த நீலகண்டன் என்பவா் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூரில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதில், தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றியும் சீா்மிகு நகா் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பெரிய கோயிலைச் சுற்றி பல்வேறு தொன்மையான அடையாளங்கள் இருப்பதால், தொல்லியல் துறையின் அனுமதி பெற்றே சீா்மிகு நகா் திட்டப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என, 2019-இல் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்றே பணிகளை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டது.
அதையடுத்து, மாநகராட்சி சாா்பில் தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், சில பகுதிகளில் மட்டுமே பணி செய்ய அனுமதி வழங்கி, பிற பகுதிகளில் மேற்கொண்ட பணிகளை நிறுத்தக் கோரி தொல்லியல்துறை தரப்பிலிருந்து மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இருப்பினும், பெரியகோயிலைச் சுற்றி பணிகள் நடந்து வருகின்றன. இதனால், தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றியுள்ள தொல்லியல் அடையாளங்கள் சேதமடையவும், அழியவும் வாய்ப்புள்ளது. எனவே, பெரியகோயிலைச் சுற்றி நடக்கும் சீா்மிகு நகா் திட்டப் பணிகளுக்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தஞ்சை பெரியகோயிலைச் சுற்றியும், தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் சீா்மிகு நகா் திட்டப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...