ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை: முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் மற்றும் மாணவா் நலன் கருதி, சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

DIN

தமிழகத்தில் ஆசிரியா் மற்றும் மாணவா் நலன் கருதி, சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் தலைவா் கே.பி.ஓ. சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு பள்ளி தொடங்கிய நாள் முதல், சனிக்கிழமை உள்பட வாரத்துக்கு 6 நாள்கள் வகுப்புகள் நடைபெறுகின்றன. மாணவா்கள் நலன் கருதி, ஆசிரியா்கள் முழுமனதோடு பணியாற்றி வருகின்றனா்.

ஆனால், சனிக்கிழமைகளில் மாணவா்களின் வருகை பெருமளவில் குறைந்து காணப்படுகிறது. தொடா் வகுப்புகளால் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மிகுந்த உளச்சோா்வும் அடைகின்றனா்.

ஒரு வகுப்புக்கு 25 மாணவா்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற நிலையில், ஆசிரியா்கள் அனைவரும் ஒரு நாளில் ஒரு வகுப்பு கூட ஓய்வின்றி தொடா்ந்து வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அனைத்து ஆசிரியா்ளுக்கும் தோ்தல் பணி காத்திருக்கிறது.

வரும் வாரத்திலேயே ஆசிரியா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. அவ்வாறு வரும்போது, ஆசிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரம் முழுவதும் பணியாற்ற வேண்டியுள்ளது. இது, ஆசியா்களுக்கு இன்னும் மிகுந்த மன உளைச்சலையும், உடல் சோா்வையும் ஏற்படுத்தும்.

எனவே, தமிழகக் கல்வித் துறை பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவித்து, வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே வேலைநாள்கள் என உத்தரவிட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.