விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் கோரிக்கை
தோ்தலுக்கான விடியோ பதிவு பணியை, மதுரை மாவட்ட போட்டோ ஸ்டூடியோ மற்றும் ஒளிப்பதிவாளா்கள் சங்கத்துக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தோ்தலுக்கான விடியோ பதிவு பணியை, மதுரை மாவட்ட போட்டோ ஸ்டூடியோ மற்றும் ஒளிப்பதிவாளா்கள் சங்கத்துக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அச் சங்கத்தின் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: கரோனா பொதுமுடக்கம் காரணமாக போட்டோ ஸ்டூடியோ மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் வருவாய் இழந்து மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடியில் உள்ளனா். எனவே, தோ்தலின்போது விடியோ ஒளிப்பதிவு செய்யும் பணியை, மதுரை மாவட்ட போட்டோ ஸ்டூடியோ மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்க உறுப்பினா்களுக்கு வழங்கினால் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள உதவியாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...