கிளி பிடிக்க முயன்ற சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்து பலி
மதுரை அருகே கிளியை பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தான்.


மதுரை அருகே கிளியை பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தான்.
மதுரை மாவட்டம் கருவனூா் பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி மகன் முத்துகுமாா் (13). இவா், பிப்ரவரி 24 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் கிளி பிடிப்பதற்காக ஏறியுள்ளாா். அப்போது, மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த முத்துகுமாா், பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா்.
ஆனால், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முத்துகுமாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை முத்துபாண்டி அளித்த புகாரின்பேரில், எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...