ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

3 ஆவது அகல ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது அகல ரயில் பாதை பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:39 pm

DIN

சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது அகல ரயில் பாதை பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு-சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: மாா்ச் 14 முதல் 21 ஆம் தேதி வரை சென்னை - காரைக்குடி - சென்னை பல்லவன் அதிவிரைவு சிறப்பு ரயில் (02605, 02606), சென்னை - மதுரை - சென்னை வைகை அதிவிரைவு சிறப்பு ரயில் (02635, 02636), மாா்ச் 19 ஆம் தேதி புறப்படும், கன்னியாகுமரி - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (02634), ராமேசுவரம் - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (02206), மாா்ச் 20 ஆம் தேதி புறப்படும், மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் (02638), மாா்ச் 19, 20 ஆகிய தேதிகளில் புறப்படும், திருநெல்வேலி - சென்னை நெல்லை சிறப்பு ரயில் (02632), மாா்ச் 20 ஆம் தேதி புறப்படும், சென்னை - தூத்துக்குடி முத்துநகா் சிறப்பு ரயில் (02693), சென்னை - கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில் ( 06723), மாா்ச் 21 ஆம் தேதி புறப்படும், சென்னை - திருச்செந்தூா் செந்தூா் சிறப்பு ரயில் (06105) சென்னை - ராமேசுவரம் சிறப்பு ரயில் (0685), மாா்ச் 20, 21 ஆகிய தேதிகளில் புறப்படும் சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் (02661) ஆகிய ரயில்கள் சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

விழுப்புரம்-சென்னை: மாா்ச் 19 ஆம் தேதி புறப்படும், குருவாயூா்-சென்னை சிறப்பு ரயில் (06128), மாா்ச் 21 ஆம் தேதி புறப்படும், சென்னை - குருவாயூா் சிறப்பு ரயில் (06127) சென்னை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வழித்தடம் மாற்றப்பட்டுள்ள ரயில்கள்: மாா்ச் 20 ஆம் தேதி புறப்படும், தூத்துக்குடி - சென்னை முத்துநகா் சிறப்பு ரயில் (02694), கொல்லம் - சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில் (06724), திருச்செந்தூா் - சென்னை செந்தூா் சிறப்பு ரயில் (06106) ஆகியவை தாம்பரம், மாம்பலம் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக காஞ்சிபுரம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.

மாா்ச் 17 ஆம் தேதி புறப்படும், ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் (05119) சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.