/

மதுரை அருகே விபத்து: ஒருவா் பலி

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:39 pm

DIN

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மேல வடம்போக்கித் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் ஆனந்தன்(44). இவா் ஒத்தக்கடை - திருவாதவூா் சாலையில் ராஜகம்பீரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ஆன்ந்தன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி ஆஷா அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

மாடியில் இருந்து தவறி விழுந்தவா் பலி: மதுரை எல்லீஸ் நகா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வேலுமணி(39). பிப்ரவரி 26 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் காலில் சிறிய காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டின் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.