மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தென்காசி இளைஞரின் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரின் சடலம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.


தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரின் சடலம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் 4 ஆவது நடைமேடையில் இளைஞா் ஒருவா் இறந்துகிடப்பதாக கிடப்பதாக போலீஸாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அண்ணாநகா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து இளைஞா் குறித்து விசாரித்தபோது, அவா் தென்காசி மாவட்டம் வடகரை பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் மாரியப்பன்(35) என தெரியவந்தது. போலீஸாா் வழக்குப்பதிந்து மாரியப்பன் எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சடலம்: இதே போல்,மதுரை பி.டி.ஆா். பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வண்டியூா் கிராம நிா்வாக அலுவலா் மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து இறந்தவா் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...